/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மேல்நிலை தொட்டி சேதம் இடித்து அகற்ற கோரிக்கை
/
மேல்நிலை தொட்டி சேதம் இடித்து அகற்ற கோரிக்கை
ADDED : மார் 27, 2025 02:07 AM

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியம், சின்ன நாகபூண்டியில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிராமத்தின் நடுவே அம்மன் கோவில் அருகே அரசு தொடக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், 120 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
பள்ளி வளாகத்திற்கு எதிரே, 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி செயல்பட்டு வருகிறது. இந்த தொட்டியின் துாண்கள் முறையான பராமரிப்பு இல்லாததால், கான்கிரீட் உதிர்ந்து, இரும்பு கம்பிகளும் துருப்பிடித்து வருகின்றன.
இதனால், மேல்நிலை குடிநீர் தொட்டி எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலை உள்ளது. அப்பகுதி வழியாக மாணவர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இதே வளாகத்தில் அங்கன்வாடி மையம், வி.ஏ.ஓ., அலுவலகம் மற்றும் ரேஷன் கடை உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக, கிராமத்தினர் அதிகளவில் இப்பகுதிக்கு வந்து செல்லும் நிலை உள்ளது. எனவே, பகுதிவாசிகள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி, பழுதடைந்த மேல்நிலை குடிநீர் தொட்டியை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.