/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பழுதடைந்த ஊராட்சி அலுவலகத்தை இடித்து அகற்ற வேண்டுகோள்
/
பழுதடைந்த ஊராட்சி அலுவலகத்தை இடித்து அகற்ற வேண்டுகோள்
பழுதடைந்த ஊராட்சி அலுவலகத்தை இடித்து அகற்ற வேண்டுகோள்
பழுதடைந்த ஊராட்சி அலுவலகத்தை இடித்து அகற்ற வேண்டுகோள்
ADDED : ஜன 05, 2025 10:52 PM

திருத்தணி:திருத்தணி ஒன்றியம், கார்த்திகேயபுரம் கிராமத்தில், ஊராட்சி அலுவலக கட்டடம் இயங்கி வந்தது. இந்த கட்டடம் விரிசல் அடைந்தும் மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதால், ஒன்றரை ஆண்டுக்கு முன், அதே பகுதியில், 15 லட்சம் ரூபாய் மதிப்பில் புதியதாக ஊராட்சி அலுவலகம் கட்டி பயன்பாட்டிற்கு விடப்பட்டது.
ஆனால், பழுதடைந்த ஊராட்சி அலுவலக கட்டடம் இடித்து அகற்றப்படாமல் உள்ளது. இந்த கட்டடம் அருகே தான் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது.
ஊராட்சி கட்டடம் இடிந்து விழுந்தால் குழந்தைகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என்பதால், பழுதடைந்த கட்டடம் இடித்து அகற்ற வேண்டும் என, அப்பகுதியினர் ள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து ஒன்றிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஒன்றியத்தில் பழுதடைந்த அரசு கட்டடங்கள் குறித்து கணக்கெடுத்து, மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று, கலெக்டர் ஒப்புதல் பெறப்பட்டு இடித்து அகற்றப்படும்' என்றார்.

