/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பாலேஸ்வரம் அணைக்கட்டில் தடுப்பு கம்பி அமைக்க கோரிக்கை
/
பாலேஸ்வரம் அணைக்கட்டில் தடுப்பு கம்பி அமைக்க கோரிக்கை
பாலேஸ்வரம் அணைக்கட்டில் தடுப்பு கம்பி அமைக்க கோரிக்கை
பாலேஸ்வரம் அணைக்கட்டில் தடுப்பு கம்பி அமைக்க கோரிக்கை
ADDED : நவ 05, 2024 10:57 PM

ஊத்துக்கோட்டை:ஆரணி ஆறு ஆந்திராவில் உருவாகி, 65.20 கி.மீட்டர் துாரம் பயணித்து, பிச்சாட்டூர், சுருட்டப்பள்ளி வழியே, தமிழக எல்லையான ஊத்துக்கோட்டையை அடைக்கிறது. அங்கிருந்து, சிட்ரபாக்கம், பனப்பாக்கம், செங்காத்தாக்குளம், கல்பட்டு, பாலேஸ்வரம், ஏ.என்.குப்பம், லட்சுமிபுரம் ஆகிய பகுதிகள் வழியே, 66.40 கி.மீட்டர் துாரம் பயணித்து, பழவேற்காடு அருகே, புலிக்காட் எனும் இடத்தில், வங்கக் கடலில் கலக்கிறது. தமிழக பகுதிகளில், ஐந்து தடுப்பணைகள் மற்றும் மூன்று அணைக்கட்டுகள் உள்ளன.
கடந்த 2009ல் 7.44 கோடி ரூபாயில் கட்டப்பட்ட பாலேஸ்வரம் அணைக்கட்டில், நான்கு மதகுகள் உள்ளன. சமீபத்தில் பெய்த மழையால் பாலேஸ்வரம் அணைக்கட்டு நிறைந்து உபரிநீர் வெளியேறி வருகிறது.
அணைக்கட்டு முழுதும் நீர் நிரம்பி கடல்போல் காட்சியளிக்கிறது. தண்ணீர் நிறைந்து காணப்படும் இந்த அணைக்கட்டிற்கு வரும் மக்கள் ஆர்வம் மிகுதியால், 'செல்பி' எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி, அணைக்கட்டிற்கு முன் தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.