/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புதிய அங்கன்வாடி மையம் அமைக்க கோரிக்கை
/
புதிய அங்கன்வாடி மையம் அமைக்க கோரிக்கை
ADDED : டிச 21, 2024 01:05 AM

திருவாலங்காடு,:திருவாலங்காடு ஒன்றியம் பழையனூர் கிராமத்தில் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், அரசு ஆரம்பப் பள்ளி அருகே, அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.
இதில், 20 குழந்தைகள் படிக்கின்றனர். கர்ப்பிணியர் மற்றும் பாலுாட்டும் தாய்மார்கள் என, 25 பேர் இணை உணவு மற்றும் ஊட்டச்சத்து பரிசோதனையால், பயனடைந்து வருகின்றனர்.
அங்கன்வாடி மையம், 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழைய கட்டடத்தில் செயல்பட்டு வந்தது. கட்டடம் பழுதடைந்ததை அடுத்து நூலக கட்டடத்திற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டது. அங்கு, போதிய இடவசதி மற்றும் கழிப்பறை வசதி இல்லாததால், குழந்தைகள் அவதிப்படுகின்றனர்.
எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, குழந்தைகளின் நலன் கருதி, பழுதடைந்த அங்கன்வாடி மைய கட்டடத்தை அகற்றி புதிய அங்கன்வாடி மைய கட்டடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.