/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மீஞ்சூர் வழித்தட மாநகர பஸ்களை பொன்னேரிக்கு நீட்டிக்க கோரிக்கை
/
மீஞ்சூர் வழித்தட மாநகர பஸ்களை பொன்னேரிக்கு நீட்டிக்க கோரிக்கை
மீஞ்சூர் வழித்தட மாநகர பஸ்களை பொன்னேரிக்கு நீட்டிக்க கோரிக்கை
மீஞ்சூர் வழித்தட மாநகர பஸ்களை பொன்னேரிக்கு நீட்டிக்க கோரிக்கை
ADDED : ஆக 07, 2025 02:08 AM
பொன்னேரி:சென்னையில் இருந்து மீஞ்சூர் வரை இயக்கப்படும் மாநகர பேருந்துகளை, பொன்னேரி வரை நீட்டிக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை தண்டையார்பேட்டை, கோயம்பேடு பணிமனைகளில் இருந்து, '56பி, 558, 151, 164, 64' ஆகிய மாநகர பேருந்துகள், தினமும் 50 - 60 நடைகள் மீஞ்சூருக்கு இயக்கப்படுகின்றன.
இப்பேருந்துகள், சென்னையில் இருந்து, பொன்னேரி - திருவொற்றியூர் சாலை வழியாக, மீஞ்சூர் வரை வந்து செல்கின்றன. அவற்றை, 10 கி.மீ., நீட்டித்து, பொன்னேரி வரை இயக்கினால், 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைவர் என, பயணியர் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து, பயணியர் கூறியதாவது:
மீஞ்சூர் - பொன்னேரி இடையே, நேரடி பேருந்து வசதி இல்லை. அரசு போக்குவரத்து கழகத்தின் இரண்டு பேருந்துகள், மீஞ்சூர் வழியாக காட்டூர் மற்றும் தத்தமஞ்சி கிராமங்களுக்கு இயக்கப்படுகின்றன.
அவை, 10க்கும் குறைவான நடைகளே இயக்கப்படுகின்றன. அதனால், பொன்னேரி - மீஞ்சூர் வழித்தடத்தில் உள்ள பயணியர், ஷேர் ஆட்டோக்களையே நம்பியுள்ளனர்.
மீஞ்சூர் வரை இயக்கப்படும் மாநகர பேருந்துகளில் சிலவற்றை காலை, மாலை நேரங்களில் பொன்னேரி வரை இயக்கினால், 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தோர் பயன்பெறுவர். இதுகுறித்து, மாநகர போக்குவரத்து கழகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.