/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவாலங்காடு ரயில் நிலையத்தில் 'சிசிடிவி' கேமரா அமைக்க கோரிக்கை
/
திருவாலங்காடு ரயில் நிலையத்தில் 'சிசிடிவி' கேமரா அமைக்க கோரிக்கை
திருவாலங்காடு ரயில் நிலையத்தில் 'சிசிடிவி' கேமரா அமைக்க கோரிக்கை
திருவாலங்காடு ரயில் நிலையத்தில் 'சிசிடிவி' கேமரா அமைக்க கோரிக்கை
ADDED : மே 10, 2025 08:49 PM
திருவாலங்காடு:சென்னை --- அரக்கோணம் ரயில் மார்க்கத்தில், திருவள்ளூர் அடுத்து திருவாலங்காடு ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையம் வழியாக, தினமும் 400க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வருகின்றன.
குறிப்பாக, 200க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள், சென்னை மூர் மார்க்கெட், அரக்கோணம் சென்று வருகின்றன.
திருவாலங்காடு ரயில் நிலையத்தில் இருந்து மின்சார ரயிலில், 60,000க்கும் மேற்பட்ட பயணியர் தினமும் சென்னை, அரக்கோணம், காஞ்சிபுரம், திருத்தணி, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
குறிப்பாக, இரவு 8:00 முதல் 12:20 மணிக்கு வரும் ரயிலில், 100க்கும் மேற்பட்ட பயணியர் திருவாலங்காடு ரயில்நிலையத்தில் இறங்குகின்றனர்.
அங்கிருந்து, தங்கள் கிராமங்களுக்கு செல்கின்றனர். இதில், சில பெண் பயணியரும் உள்ளனர்.
பயணியர் அதிகளவில் வரும் ரயில் நிலையத்தில், 'சிசிடிவி' கேமரா அமைக்கவில்லை.
இதை பயன்படுத்தி சமூக விரோதிகள் கஞ்சா, குட்கா பொருட்கள் கடத்தல், பெண்களை பாலியல் ரீதியில் துன்புறுத்துதல் உள்ளிட்ட குற்றச்சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.
எனவே, பயணியர் பாதுகாப்பை கருதி, திருவாலங்காடு ரயில் நிலையத்தில் 'சிசிடிவி' கேமரா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.