/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஜே.என்.சாலை ஆயில்மில் அருகில் வேகத்தடை அமைக்க கோரிக்கை
/
ஜே.என்.சாலை ஆயில்மில் அருகில் வேகத்தடை அமைக்க கோரிக்கை
ஜே.என்.சாலை ஆயில்மில் அருகில் வேகத்தடை அமைக்க கோரிக்கை
ஜே.என்.சாலை ஆயில்மில் அருகில் வேகத்தடை அமைக்க கோரிக்கை
ADDED : ஜன 07, 2025 08:44 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் ஜே.என்.சாலை ஆயில் மில் அருகில் தொடரும் நெரிசலை தவிர்க்க வேகத்தடை அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் ரயில் நிலையம், மணவாள நகர் பகுதியில் இருந்து, திருவள்ளூர், திருத்தணி, செங்குன்றம் வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும், ஜே.என்.சாலை வழியாக பயணிக்கின்றன. அதே போல, திருவள்ளூரில் இருந்து சென்னை செல்லும் வாகனங்களும் இதே சாலையில், பயணிக்கின்றன.
இதில், பூங்கா நகர், ராஜாஜிபுரம் செல்வோர், ஆயில் மில் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபம் எதிரே உள்ள இந்திரா காந்தி சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
ஜே.என்.சாலையில் இருந்து, இந்திரா காந்தி சாலை செல்லும் வாகனங்களும், எதிர்தரப்பில் இருந்து ஜே.என்.சாலைக்கு வரும் வாகனங்களும் சந்திக்கும் இடத்தில் வேகத்தடை மற்றும் சிக்னல் இல்லை.
இதனால், இச்சாலை சந்திப்பில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், அவ்வப்போது விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது.
எனவே, திருமண மண்டபம் எதிரில், ஜே.என்.சாலையில் இருபுறமும் வேகத்தடை அமைத்தால் தான், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் தவிர்க்கப்படும்.
எனவே, நெடுஞ்சாலைத் துறையினர் இச்சாலை சந்திப்பில் வேகத்தடை அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.