/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பள்ளி வாகனங்களை கண்காணிக்க கோரிக்கை
/
பள்ளி வாகனங்களை கண்காணிக்க கோரிக்கை
UPDATED : ஏப் 23, 2025 02:33 AM
ADDED : ஏப் 23, 2025 02:30 AM

பள்ளிப்பட்
திருதத்ணி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலக எல்லைக்கு உட்பட்டவை பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை தாலுகா பகுதிகள். இந்த பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி, கல்லுாரி மற்றும் தொழிற்சாலை பணியாளர் வாகனங்கள், இந்த அலுவலகத்தில் பரிசோதனை செய்யப்படுகின்றன.
தகுதி பெற்ற வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஓட்டுனர் உரிமம் பெற்றவர்கள் பேருந்துகளை இயக்கி வருகின்றனர். பேருந்து ஓட்டுனர்கள் முறையாக சாலை விதிகளை பின்பற்றுகின்றனரா என, கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
மேலும், கிராமப்புறங்களில் இயக்கப்படும் தனியார் பள்ளி வாகனங்கள், அங்குள்ள வேகத்தடைகளை ஒரு பொருட்டாக கருதாமல், வேகமாக இயக்கப்படுவதால் விபத்துகள் ஏற்படுகின்றன. சமீபத்தில், மேலப்பூடி அரசு நடுநிலை பள்ளி எதிரே, வேகமாக வந்த தனியார் கல்லுாரி பேருந்து மோதியதில், பெண் குழந்தை உயிரிழந்தது.
இந்த பள்ளிக்கு எதிரே இரண்டு வேகத்தடைகள் உள்ள நிலையிலும், விபத்து நேரிட்டது பெற்றோர் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.