/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மெதுார் ஏரிக்கு மழைநீர் செல்லும் கால்வாயை துார்வார கோரிக்கை
/
மெதுார் ஏரிக்கு மழைநீர் செல்லும் கால்வாயை துார்வார கோரிக்கை
மெதுார் ஏரிக்கு மழைநீர் செல்லும் கால்வாயை துார்வார கோரிக்கை
மெதுார் ஏரிக்கு மழைநீர் செல்லும் கால்வாயை துார்வார கோரிக்கை
ADDED : நவ 21, 2024 12:40 AM

பொன்னேரி:பொன்னேரி அடுத்த மெதுார் கிராமத்தில், 780 ஏக்கர் பரப்பளவு கொண்ட பாசன ஏரி அமைந்துள்ளது. மழைக்காலங்களில் ஏரியில் மழைநீர் தேக்கி வைக்கப்படுவதால், நிலத்தடி நீர் பாதுகாக்கப்பட்டு வருகிறது
இந்த ஏரியின் கரையோரங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து, பழவேற்காடு மீனவ பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில், பொன்னேரி அடுத்த பெரியகாவணம், காட்டாவூர் வழியாக மெதுார் ஏரிக்கு செல்லும் கால்வாய் பராமரிப்பு இன்றி உள்ளது. கால்வாய் முழுதும் கோரை புற்கள் மற்றும் முள்செடிகள் சூழ்ந்து இருக்கின்றன.
மேலும், கால்வாயின் குறுக்கே, காட்டாவூர் - உப்பளம் சாலை போக்குவரத்திற்காக கட்டப்பட்ட சிறுபாலம் குறுகலாகவும் இருப்பதால், மழைநீர் சீராக ஏரிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. ஒரு சில பகுதிகளில் கால்வாயின் சில பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன.
இதனால், மெதுார் ஏரிக்கு மழைநீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, கால்வாயை முழுமையாக அளவீடு செய்து, துார்வாரி சீரமைக்கவும், சிறுபாலத்தை விரிவுப்படுத்த வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.