/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
காந்திநகரில் ரேஷன் கடை செயல்பட கோரிக்கை
/
காந்திநகரில் ரேஷன் கடை செயல்பட கோரிக்கை
ADDED : மே 15, 2025 09:30 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் அரசு மருத்துவமனை எதிரில் உள்ள ரேஷன் கடையை மாற்றாமல், தொடர்ந்த செயல்படுத்த கலெக்டருக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.
திருவள்ளூர் அரசு மருத்துவமனை எதிரில் உள்ள காந்திபுரம் குடியிருப்போர் நல சங்கத்தினர் திருவள்ளூர் கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட காந்திபுரம் பகுதியில் செயல்பட்டு வரும், ரேஷன் கடையில் கடையில் 3 வார்டுகளுக்கு உட்பட்ட 8 குடியிருப்பு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ரேசன் பொருட்களை வாங்கி வருகின்றனர்.
தற்போது புங்கத்துார் பகுதியில் அரசு இடத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்டு, காந்திபுரம் பகுதியில் உள்ள ரேஷன் கடையினை மாற்ற ஏற்பாடு நடைபெற்று வருகிறது.
காந்திபுரம் குடியிருப்பு 1 மற்றும் 2, ஐ.ஆர்.என்., பின்புறம், சங்கீதா கார்டன், ஜே.என்.சாலை பகுதியைச் சேர்ந்த 800 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர்.
மேலும் எங்கள் பகுதியில் குடியிருப்போரில் வயதான முதியோர் மற்றும் பெண்கள் அதிகம் இருப்பதாலும், அவர்கள் புங்கத்துார் பகுதிக்குச் சென்று ரேசன் பொருட்களை வாங்கி வருவது சிரமமாக இருக்கும்.
எனவே, மேற்குறிப்பிட்ட 5 பகுதிகளுக்கு மட்டும் தற்போது இயங்கி வரும் கடையில் தொடர்ந்து பொருட்களை பெறுவதற்கு ஆவண செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.