/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பட்டாபிராம் - தண்டுரை வழியாக கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை
/
பட்டாபிராம் - தண்டுரை வழியாக கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை
பட்டாபிராம் - தண்டுரை வழியாக கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை
பட்டாபிராம் - தண்டுரை வழியாக கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை
ADDED : நவ 10, 2024 08:59 PM
ஆவடி:சென்னை - திருவள்ளூர் இணைக்கும் வகையில், பட்டாபிராமில் எல்.சி., கேட் - 2 ரயில்வே கடவுப்பாதை உள்ளது. இங்கு, போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வு காண, 78.31 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டும் பணிகள் கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்து வருகிறது.
இந்நிலையில், பொதுமக்கள் கோரிக்கை ஏற்று, செப்., 25ம் தேதி, மேம்பாலத்தின் ஒரு வழிப்பாதை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளாக, பட்டாபிராம், தண்டுரை, வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை வழியாக இயக்கப்பட்ட பேருந்துகள் அனைத்தும், புதிதாக திறக்கப்பட்ட மேம்பாலம் வழியாக சென்று வருகின்றன.
ஆனால், தாம்பரம் மற்றும் கிளாம்பாக்கம் வரை செல்லும் தடம் எண்: 202, 202 எக்ஸ் மற்றும் 202ஏ, அரசு பேருந்துகள் மட்டும், பழையபடி பட்டாபிராம், தண்டுரை வழியாக இயக்கப்பட்டது.
இதனால், வெளிவட்ட சாலை சுற்றுவட்டாரத்தில் உள்ள நெமிலிச்சேரி, பாலவேடு, அன்னம்பேடு, கருணாகரச்சேரி மற்றும் திருநின்றவூர் பகுதி மக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இது குறித்த 'ஆன்லைன்' புகாரை அடுத்து, தாம்பரம் வரை செல்லும் தடம் எண்: 202 அரசு பேருந்து மற்றும் கிளாம்பாக்கம் வரை செல்லும் 202 எக்ஸ் பேருந்துகள், பட்டாபிராம் புது ரயில்வே மேம்பாலம் வழியாக இயக்கப்பட்டு வருகின்றன.
அதேபோல், பட்டாபிராம் மக்கள் பயன்பெறும் வகையில், தாம்பரம் வரை செல்லும் தடம் எண்: 202 ஏ அரசு பேருந்து பட்டாபிராம், தண்டுரை வழியாக இயக்கப்படுகிறது.
இது ஒரு புறம் இருக்க, புதிதாக திறக்கப்பட்ட ரயில்வே மேம்பாலம் வழியாக மற்ற அனைத்து பேருந்தும் செல்வதால், தண்டுரை வழியாக செல்லும் பேருந்துகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால், பட்டாபிராம் பகுதிவாசிகள் போதிய பேருந்து வசதி இல்லாமல் அவதிப்படுகின்றனர்.
இதை பயன்படுத்தி, ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள், 2 கி.மீ., துாரம் செல்வதற்கு 20 ரூபாய் வசூலித்து வருகின்றனர். எனவே, பட்டாபிராம், தண்டுரை வழியாக கூடுதல் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.