/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
துார்வாரப்பட்ட கோவில் குளத்திற்கு தண்ணீர் வர வழி ஏற்படுத்த கோரிக்கை
/
துார்வாரப்பட்ட கோவில் குளத்திற்கு தண்ணீர் வர வழி ஏற்படுத்த கோரிக்கை
துார்வாரப்பட்ட கோவில் குளத்திற்கு தண்ணீர் வர வழி ஏற்படுத்த கோரிக்கை
துார்வாரப்பட்ட கோவில் குளத்திற்கு தண்ணீர் வர வழி ஏற்படுத்த கோரிக்கை
ADDED : மே 17, 2025 02:10 AM

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியம் அம்மையார்குப்பம் கிராமத்தில் வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலின் அருகே உள்ள குளத்தில் செடி, கொடிகள் அதிகளவில் வளர்ந்து இருந்தன.
ஐந்து ஆண்டுகளுக்கு முன், கிராமத்து இளைஞர்கள், குளத்தில் வளர்ந்திருந்த முள் மரங்களை வெட்டி அகற்றினர். இளைஞர்களின் செயலுக்கு வரவேற்பு அளித்த கிராமத்தினர், இயந்திரம் வாயிலாக சீரமைக்க நிதியுதவி வழங்கினர்.
பின், திருத்தணி எம்.எல்.ஏ., சந்திரன், அரக்கோணம் எம்.பி., ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு, குளத்தை முழுவீச்சில் சீரமைக்க ஏற்பாடு செய்தனர்.
இதன் பயனாக, குளம் முற்றிலுமாக துார்வாரி, இரண்டு அடுக்கு குளமாக விரிவாக்கம் செய்யப்பட்டது.
கிராமத்தின் மேற்கில் உள்ள ஆறும், வடக்கில் உள்ள ஏரியும், ஐந்து ஆண்டுகளாக மழைக்காலத்தில் நிரம்பி வழிகின்றன. ஆனாலும், இந்த குளத்திற்கு நீர்வரத்துக்கு வழி இல்லாததால், துார்வாரியும் பலனில்லாமல் வறண்டு கிடக்கிறது.
குளத்திற்கு மேற்கில் பாயும் ஆற்றில் இருந்து, குழாய் வாயிலாக நீர்வரத்துக்கு வழி ஏற்படுத்தினால், குளம் நிரம்பி வழியும். எனவே, குளத்திற்கு நீர்வரத்து ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.