/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நல்லதண்ணீர் குளத்தில் படர்ந்துள்ள தாமரை இலைகள் அகற்ற கோரிக்கை
/
நல்லதண்ணீர் குளத்தில் படர்ந்துள்ள தாமரை இலைகள் அகற்ற கோரிக்கை
நல்லதண்ணீர் குளத்தில் படர்ந்துள்ள தாமரை இலைகள் அகற்ற கோரிக்கை
நல்லதண்ணீர் குளத்தில் படர்ந்துள்ள தாமரை இலைகள் அகற்ற கோரிக்கை
ADDED : ஏப் 24, 2025 02:24 AM

திருத்தணி:திருத்தணி காந்திநகர் பகுதியில் நல்லதண்ணீர் குளம் உள்ளது. இந்த குளத்தில் தண்ணீர் இருந்தால், காந்திநகர், கலைஞர்நகர், முருக்கப்பநகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயரும்.
இந்நிலையில் போதிய பராமரிப்பின்றி இருந்த நல்லதண்ணீர் குளத்தை 2020-2021ல் மாசு கட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் துறையின் மூலம், துார்வாரி, கரைபலப்படுத்தி சுற்றுசுவர் மற்றும் நடைபாதை வசதியுடன் பூங்கா ஏற்படுத்த 1.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு, 2021 ஜனவரியில் நல்லதண்ணீர் குளத்தை சீரமைப்பு பணி செய்து மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டது.
பின், இந்த குளத்தை நகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், குளத்தில் தாமரை இலைகளால் படர்ந்துள்ளன. இந்த இலைகளால் தண்ணீர் மாசுப்படுகிறது.
இதுதவிர குளத்தை சுற்றி அமைக்கப்பட்ட நடைபாதை மற்றும் வேலியும் சேதம் அடைந்துள்ளன.
எனவே, நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து நல்லதண்ணீர் குளத்தில் படர்ந்துள்ள தாமரை இலைகளை அகற்றி குளத்தை சீரமைக்க வேண்டும் என, காந்திநகர் பகுதியினர் எதிர்பார்கின்றனர்.