/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஊராட்சி மன்ற கட்டடம் சீரமைக்க கோரிக்கை
/
ஊராட்சி மன்ற கட்டடம் சீரமைக்க கோரிக்கை
ADDED : ஜூலை 04, 2025 02:55 AM

திருவாலங்காடு:குப்பம் கண்டிகையில் சேதமடைந்த ஊராட்சி அலுவலக கட்டடத்தை சீரமைக்க வேண்டும் என, பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
திருவாலங்காடு ஒன்றியம், குப்பம் கண்டிகை ஊராட்சியில் அரசு பள்ளி அருகே ஊராட்சி அலுவலக கட்டடம் உள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கட்டடத்தை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், தற்போது கட்டடம் விரிசல் அடைந்து உள்ளது.
மேலும், மேற்தளம் சேதடைந்து உள்ளதால் மழையின் போது தண்ணீர் ஒழுகி, அலுவலகத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
ஊராட்சி அலுவலகத்தில் கதவுகள் மற்றும் ஆவணங்கள் வைக்கும் அறைகளும் சேதம் அடைந்துள்ளதால் ஊராட்சி அலுவலக கட்டடம் பூட்டியே கிடக்கிறது.
தற்போது, ஊராட்சி அலுவலகம் மாற்று கட்டடத்தில் இயங்கி வருகிறது. சேதமடைந்த கட்டடத்தை இடித்து விட்டு புதிதாக ஊராட்சி அலுவலக கட்டடம் கட்ட வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.