/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மோசூர் ஏரிக்கரை சாலை சீரமைக்க கோரிக்கை
/
மோசூர் ஏரிக்கரை சாலை சீரமைக்க கோரிக்கை
ADDED : மே 15, 2025 06:56 PM
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியம், நாராயணபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது மோசூர் கிராமம். மோசூரை ஒட்டி காந்தகிரி மலைக்கோவில் அமைந்துள்ளது.
அம்மையார்குப்பம் இந்திரா நகரில் இருந்து மோசூர் ஏரிக்கரை வழியாக, காந்தகிரி கிரிவலப்பாதைக்கு தார் சாலை வசதி உள்ளது.
அம்மையார் குப்பத்தில் இருந்து இந்த ஏரிக்கரை சாலை வழியாக நுாற்றுக்கணக்கானோர் தினசரி நடைபயிற்சி மேற்கொள்கின்றனர்.
ஏரிக்கரையில் உள்ள நீர்பரப்பு மற்றும் கிரிவலப்பாதையில் நிலவும் இயற்கையான சூழல், நடைபயிற்சியில் ஈடுபடுபவர்களை மேலும் உற்சாகம் ஊட்டுவதாக அமைந்துள்ளது.
இதனால், சிறுவர்கள் முதல் முதியவர்களை வரை ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் இந்த மார்க்கத்தில் நடைபயிற்சியில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.
அம்மையார்குப்பம் வாசிகளின் உடல் ஆரோக்கியத்துடன் தொடர்புடைய இந்த ஏரிக்கரை சாலை முறையான பராமரிப்பு இல்லாததால், குண்டும், குழியுமாக சீரழிந்து கிடக்கிறது.
இதனால், இந்த வழியாக நடந்து செல்லும் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பகுதிவாசிகளின் நலன் கருதி இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதியினரிடையே கோரிக்கை எழுந்துள்ளது.