/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நாலுார் - கம்மவார்பாளையம் சாலையை சீரமைக்க கோரிக்கை
/
நாலுார் - கம்மவார்பாளையம் சாலையை சீரமைக்க கோரிக்கை
நாலுார் - கம்மவார்பாளையம் சாலையை சீரமைக்க கோரிக்கை
நாலுார் - கம்மவார்பாளையம் சாலையை சீரமைக்க கோரிக்கை
ADDED : ஜன 20, 2025 01:55 AM

பொன்னேரி:பொன்னேரி - மீஞ்சூர் மாநில நெடுஞ்சாலையில் உள்ள நாலுார் ஏரிக்கரையில் இருந்து, கம்மார்பாளையம் கிராமத்திற்கு செல்லும், 2கி.மீ., தொலைவிற்கான ஒன்றிய சாலை போக்குவரத்திற்கு லாயகற்ற நிலையில் சேதம் அடைந்து கிடக்கிறது.
ஏரியின் உபரிநீர் வெளியேறும் கலங்கல் பகுதி அருகே இந்த சாலை தாழ்வாக இருப்பதால் அங்கும் மழைநீர் குளம்போல் தேங்கிவிடுகிறது.
ஏரி நிரம்பும்போது, இரண்டு அடி உயரத்திற்கு உபரிநீர் சாலையை கடந்து, கால்வாய்களில் பயணிக்கிறது. இதனால் அச்சமயங்களில் சாலையில் போக்குவரத்து பாதிக்கிறது. கிராமவாசிகள் அவரச பணிகளுக்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். இப்பகுதியில் தரைப்பாலம் அமைக்க வேண்டும் என கிராமவாசிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
சாலையை சீரமைத்து, ஏரியின் கலங்கல் பகுதியில் தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமவாசிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.