/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கிளாம்பாக்கத்திற்கு நேரடி பேருந்து இயக்க கோரிக்கை
/
கிளாம்பாக்கத்திற்கு நேரடி பேருந்து இயக்க கோரிக்கை
ADDED : நவ 12, 2024 07:22 AM
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சிப்காட், சிட்கோ, தேர்வாய்கண்டிகை சிப்காட் மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகளில், 340 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
அவற்றில், தமிழகத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் வேலை பார்த்து வருகின்றனர்.
குறிப்பாக தென் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் கும்மிடிப்பூண்டி மற்றும் சுற்றியுள்ள பகுதி களில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
சில வருடங்களுக்கு முன், கும்மிடிப்பூண்டியில்இருந்து நேரடியாக கோயம்பேடு சென்று பேருந்துகள் பிடித்து, சொந்த ஊருக்கு சென்று வந்தனர். தற்போது, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சென்று, சொந்த ஊருக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அதற்காக, கும்மிடிப்பூண்டியில் இருந்து மாதவரம், மாதவரத்தில் இருந்து கிளாம்பாக்கம், கிளாம்பாக்கத்தில் இருந்து சொந்த ஊருக்கு சென்று வருகின்றனர்.
இதனால் பெட்டி படுக்கை மற்றும் குழந்தைகளுடன் மூன்று பேருந்துகள் மாறி செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தொழில் நகரமான கும்மிடிப்பூண்டியில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு நேரடி பேருந்துகள் இயக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

