/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொன்னேரி - தேவதானம் தடத்தில் அரசு பேருந்து இயக்க கோரிக்கை
/
பொன்னேரி - தேவதானம் தடத்தில் அரசு பேருந்து இயக்க கோரிக்கை
பொன்னேரி - தேவதானம் தடத்தில் அரசு பேருந்து இயக்க கோரிக்கை
பொன்னேரி - தேவதானம் தடத்தில் அரசு பேருந்து இயக்க கோரிக்கை
ADDED : ஜன 19, 2025 08:25 PM
பொன்னேரி:பொன்னேரி - மீஞ்சூர் மாநில நெடுஞ்சாலையில் உள்ள மேட்டுப்பாளையத்தில் இருந்து, முறிச்சம்பேடு, அனுப்பம்பட்டு, தேவதானம், காணியம்பாக்கம், வேளூர் வழியாக திருவெள்ளவாயல் வரை செல்லும் வழித்தடத்தில், 30க்கும் அதிகமான கிராமங்கள் உள்ளன.
இந்த வழித்தடத்தில், 30ஆண்டுகளுக்கு முன், அரசு பேருந்து தடம் எண். 95இ இயக்கப்பட்டு வந்தது. 'சாலை சரியில்லை, பேருந்துகள் பற்றாக்குறை, வருவாய் குறைவு' உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த பேருந்து சேவை மேற்கண்ட வழித்தடத்தில் நிறுத்தப்பட்டது.
தற்போது சாலை வசதி நல்ல நிலையில் இருக்கிறது. இருந்தும், இந்த வழித்தடத்தில் அரசு பேருந்து சேவை மீண்டும் இயக்கப்படாமல் இருப்பதால், மேற்கண்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் அத்யாவசிய தேவைகளுக்கு பொன்னேரி, மீஞ்சூர் சென்று வருவதற்கு பெரிதும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இந்த வழித்தடத்தில் உள்ள தேவதானம் கிராமத்தில், பிரசித்தி பெற்ற 'வடஸ்ரீரங்கம்' எனப்படும் ரங்கநாத பெருமாள் கோவில் அமைந்து உள்ளது. இங்கு சனிக்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவர்கள் பேருந்து சேவை இல்லாமல் தவிக்கின்றனர்.
இந்த வழித்தடத்தில் உள்ள, 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெறும் வகையிலும், ரங்கநாதர் கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களின் வசதிக்காகவும், அரசு பேருந்து இயக்க போக்குவரத்து துறை நிர்வாகம் நடவடிக்கை என கிராமவாசிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.