/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாந்தீஸ்வரர் பரிகார பூஜைக்கு தனி மண்டபம் அமைக்க கோரிக்கை
/
மாந்தீஸ்வரர் பரிகார பூஜைக்கு தனி மண்டபம் அமைக்க கோரிக்கை
மாந்தீஸ்வரர் பரிகார பூஜைக்கு தனி மண்டபம் அமைக்க கோரிக்கை
மாந்தீஸ்வரர் பரிகார பூஜைக்கு தனி மண்டபம் அமைக்க கோரிக்கை
ADDED : நவ 09, 2025 03:11 AM
திருவாலங்காடு: மாந்தீஸ்வரர் பரிகார பூஜை நடைபெறும் முதல் திருச்சுற்று மண்டபத்தில் இடவசதி குறைவாக உள்ளதால், மாற்று இடத்தில் மண்டபம் அமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் அமைந்துள்ளது.
இக்கோவிலுக்கு திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இக்கோவிலில், 2010 முதல் வாரந்தோறும் சனிக்கிழமை மாந்தீஸ்வரர் பரிகார பூஜை நடந்து வருகிறது. காலை 8:00 -- 12:00 மணி வரையில் மூன்று குழுக்களாக, 160 -- 200 பக்தர்கள் வரையில் பூஜையில் பங்கேற்று வருகின்றனர். கட்டண தொகையாக 1,600 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. தற்போது, பரிகார பூஜை முதல் திருச்சுற்று மண்டபத்தில் நடந்து வருகிறது.
இங்கு, பரிகாரம் செய்ய போதிய இடவசதி இல்லாததால், பக்தர்கள் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.
எனவே, மாந்தீஸ்வரர் பரிகார பூஜையை, கோவில் வளாகத்தில் உள்ள மாற்று இடத்தில் மண்டபம் அமைத்து நடத்த, திருத்தணி கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

