/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஊடு தீவன பயிரில் லாபம் கிடைக்கும் விதை பரிசோதனை அலுவலர் தகவல்
/
ஊடு தீவன பயிரில் லாபம் கிடைக்கும் விதை பரிசோதனை அலுவலர் தகவல்
ஊடு தீவன பயிரில் லாபம் கிடைக்கும் விதை பரிசோதனை அலுவலர் தகவல்
ஊடு தீவன பயிரில் லாபம் கிடைக்கும் விதை பரிசோதனை அலுவலர் தகவல்
ADDED : நவ 09, 2025 03:08 AM
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள், தீவன பயிர், பயறு வகைகளை விதை பரிசோதனை செய்து, ஊடு பயிராக விதைத்து லாபம் பெறலாம் என, வேளாண் துறை அலுவலர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட விதை பரிசோதனை நிலைய மூத்த வேளாண் அலுவலர் ராஜேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் கீழ், விதை மற்றும் உயிர்ம சான்று துறை கட்டுப்பாட்டில், திருவள்ளூர் மாவட்ட விதை பரிசோதனை நிலையம், திருவள்ளூர் பெரியகுப்பம் ஜே.என்., சாலையில் செயல்பட்டு வருகிறது.
அங்கு, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஆய்வக உபகரணங்களை கொண்டு, விதைகளின் தரத்தை துல்லியமாக பரிசோதித்து, தரமான விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
நெல், உளுந்து, பச்சை பயறு, நிலக்கடலை, எள், கீரை மற்றும் தோட்டப்பயிர்களுக்கு ஊடு பயிராக வளர்க்க தீவன பயிர்களை விதைக்கலாம். கினியா புல், நேம்பியர் கம்பு, வீரிய ஒட்டுப்புல், பயறு வகைகள் உள்ளிட்ட விதைகளை பரிசோதனை செய்து விதைக்கலாம்.
இதன் வாயிலாக தரமற்ற விதைகள், விவசாயிகளுக்கு கிடைப்பதை தடுப்பதில், விதை பரிசோதனை நிலையம் முக்கிய பங்காற்றி வருகிறது.
எனவே, விவசாயிகள் தங்களிடம் இருக்கும் விதை மாதிரியை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ கொடுத்து, பரிசோதனை கட்டணம், 80 ரூபாய் செலுத்தி, தர பரிசோதனை செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

