/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கோளூரில் ஏ.டி.எம்., அமைக்க கோரிக்கை
/
கோளூரில் ஏ.டி.எம்., அமைக்க கோரிக்கை
ADDED : ஜன 15, 2025 11:44 PM
பொன்னேரி, பொன்னேரி அடுத்த கோளூர் கிராமத்தை சுற்றிலும், பனப்பாக்கம், இலுப்பாக்கம், புதுச்சேரிமேடு, அண்ணாமலைச்சேரி, எடகுப்பம் உள்ளிட்ட, 30க்கும் அதிகமான கிராமங்கள் உள்ளன.
மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், நுாறு நாள் பணியாளர்கள், முதியோர் ஓய்வூதியம் மற்றும் அரசின் பல்வேறு உதவித்தொகைகளை பெறுவோர், வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுக்க, 4-7 கி.மீ., தொலைவில் உள்ள மெதுார் பகுதிக்கு செல்லவேண்டும்.
அங்குள்ள இந்தியன் வங்கி ஏ.டி.எம்., மையத்தில் பணம் எடுக்க செல்ல வேண்டியுள்ளது. இதனால் வீண் அலைச்சல் மற்றும் காலவிரயம் ஏற்படுகிறது. எனவே, கோளுரில் ஏ.டி.எம்., அமைக்க அப்பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து கிராமவாசிகள் தெரிவித்ததாவது:
அவசர தேவைகளுக்கு பணம் எடுக்க, மெதுார் செல்ல வேண்டியதாக உள்ளது. மெதுாரில் உள்ள இரண்டு ஏ.டி.எம். மையங்களும் சரிவர செயல்படுவதில்லை.
கோளூர் கிராமத்தில் பணம் டிபாசிட் செய்யவும், பணம் எடுக்கவும் ஏ.டி.எம்., மையம் அமைக்க வேண்டும். மேலும், வங்கி சேவை கிளை அமைத்தால், இப்பகுதியினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.