/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
எஸ்.வி.ஜி.புரம் சமத்துவபுரத்தில் விரைவு பேருந்து நிறுத்த கோரிக்கை
/
எஸ்.வி.ஜி.புரம் சமத்துவபுரத்தில் விரைவு பேருந்து நிறுத்த கோரிக்கை
எஸ்.வி.ஜி.புரம் சமத்துவபுரத்தில் விரைவு பேருந்து நிறுத்த கோரிக்கை
எஸ்.வி.ஜி.புரம் சமத்துவபுரத்தில் விரைவு பேருந்து நிறுத்த கோரிக்கை
ADDED : ஜூலை 25, 2025 01:29 AM

ஆர்.கே.பேட்டை:தொழிற்பேட்டையாக வளர்ந்து வரும் சமத்துவபுரம் பகுதியில் விரைவு பேருந்துகளும் நின்று செல்ல வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆர்.கே.பேட்டையில் இருந்து திருத்தணி செல்லும் மாநில நெடுஞ்சாலையில், எஸ்.வி.ஜி.புரம் அருகே அமைந்துள்ளது சமத்துவபுரம். 100 குடியிருப்புககளை கொண்ட இந்த சமத்துவபுரத்தை ஒட்டி தற்போது ஏராளமான புதிய குடியிருப்புகளும், கல்வி நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் செயல்பட்டு வருகின்றன. இதனால், இரவு பகல் எந்நேரமும் மக்கள் நடமாட்டம் இருந்து வருகிறது.
சமத்துவபுரத்தில் இருந்து எஸ்.பி.கண்டிகை, கொண்டாபுரம், மதுராபுரம், வேலன்கண்டிகை என பல்வேறு கிராமங்களுக்கும் சாலை வசதி உள்ளது.
இந்த கிராமங்களை சேர்ந்தவர்கள், சமத்துவபுரம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து திருத்தணி, சென்னை, வேலுார், திருப்பதி உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணம் செய்கின்றனர். ஆனால், இங்குள்ள நிறுத்தத்தில் விரைவு பேருந்துகள் நிறுத்தப்படுவது இல்லை.
இதனால் அவதிப்பட்டு வந்த பகுதி மக்களின் கோரிக்கைபடி கடந்த 2012ல், விரைவு பேருந்துகளும் இங்கு நின்று பயணியரை ஏற்றி செல்ல வேண்டும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் உத்தரவு விட்டனர்.
ஆனால், காலப்போக்கில் அந்த உத்தரவு பின்பற்றப்படாமல் போனது. இதனால், இந்த பகுதியில் உள்ளவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இரவு பகல் எந்நேரமும் போக்குவரத்து உள்ள மாநில நெடுஞ்சாலையாக இருந்தும், போதிய பேருந்து வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஒன்றிரண்டு நகர பேருந்துகள், தனியார் பேருந்துகள் மட்டுமே இங்கு நின்று செல்கின்றன.
இந்த மார்க்கத்தில் தற்போது அதிகளவில் இயக்கப்படும் அரசு பேருந்து தடம் எண்: 777 உள்ளிட்ட அனைத்து விரைவு பேருந்துகளும் நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.