/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கோவில் வளாகத்தில் 'பார்க்கிங்' நடவடிக்கை எடுக்க கோரிக்கை
/
கோவில் வளாகத்தில் 'பார்க்கிங்' நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கோவில் வளாகத்தில் 'பார்க்கிங்' நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கோவில் வளாகத்தில் 'பார்க்கிங்' நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ADDED : மே 12, 2025 11:31 PM

திருவாலங்காடு, திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் அமைந்துள்ளது.
இந்த கோவிலுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான ஆந்திர, கர்நாடகவில் இருந்து, தினமும் 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
கோவில் அமைந்துள்ள பகுதியில் பொது போக்குவரத்து குறைவு என்பதால், பெரும்பாலான பக்தர்கள், இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, கார் மற்றும் வேன்கள் வருகின்றன.
இந்நிலையில், பக்தர்கள் வரும் வாகனத்திற்கு இடம் அளிக்காத வகையில், கோவில் வளாகத்தில் ஆட்டோக்கள் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், பக்தர்கள் வாகனத்தை நிறுத்த இடமின்றி சிரமப்படுகின்றனர்.
மேலும், கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்து வரும் நிலையில், அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி சவாரியாக ஏற்றிச் செல்ல கோவில் வளாகத்தை ஆட்டோ ஸ்டாண்டாக மாற்றி வருகின்றனர் . இதை தடுக்க கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.