/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆமூர் ஏரி நீர்வரத்து கால்வாயை துார்வாரி சீரமைக்க கோரிக்கை
/
ஆமூர் ஏரி நீர்வரத்து கால்வாயை துார்வாரி சீரமைக்க கோரிக்கை
ஆமூர் ஏரி நீர்வரத்து கால்வாயை துார்வாரி சீரமைக்க கோரிக்கை
ஆமூர் ஏரி நீர்வரத்து கால்வாயை துார்வாரி சீரமைக்க கோரிக்கை
ADDED : ஜூன் 30, 2025 02:23 AM

பொன்னேரி:ஆமூர் ஏரி நீர்வரத்து கால்வாயை சீரமைக்க வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொன்னேரி அடுத்த நத்தம், பஞ்செட்டி, தச்சூர், நெடுவரம்பாக்கம், முஸ்லீம்நகர், மாதவரம் வழியாக ஆமூர் ஏரிக்கு மழைநீர் கொண்டு செல்லும் நீர்வரத்துக்கால்வாய் பராமரிப்பு இன்றி உள்ளது.
கால்வாய் முழுதும், 10அடி உயரத்திற்கு கோரைபுற்கள், முள்செடிகள் சூழ்ந்து கிடக்கின்றன. பல்வேறு பகுதிகளில் கரைகள் சேதம் அடைந்து இருக்கின்றன.
கால்வாயை ஒட்டி அமைந்துள்ள குடியிருப்புகள், தனியார் தொழிற்சாலை மற்றும் பள்ளிகளின், கழிவுகளும், கழிவுநீரும் இதில் கொட்டப்படுகின்றன.
விவசாய நிலங்கள் வழியாக இந்த கால்வாய் செல்வதால், அதில் தேங்கும் மழைநீரை விவசாயிகள் விவசாயத்திற்கு பயன்படுத்தினர்.
மேலும் விளைநிலங்களில் தேங்கும் அதிகப்படியான மழைநீரை வெளியேற்றவும் இந்த கால்வாய் பயனுள்ளதாக இருந்தது.
இந்நிலையில், கால்வாய் பராமரிப்பு இன்றி கிடப்பதால், மழைக்காலங்களில் ஆமூர் ஏரிக்கு மழைநீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. விவசாயம் செய்பவர்களும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
கால்வாயை முழுமையாக அளவீடு செய்து, முள் செடிகளை அகற்றி இருபுறமும் கரைகள் அமைக்க வேண்டும் என, விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.