/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மனைவியை கடப்பாரையால் தாக்கிய கணவருக்கு 'காப்பு'
/
மனைவியை கடப்பாரையால் தாக்கிய கணவருக்கு 'காப்பு'
ADDED : டிச 08, 2025 06:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: பரங்கிமலையை சேர்ந்தவர் மீரா, 48. அவர், 15 ஆண்டுகளாக கணவர் செல்வத்தை பிரிந்து, இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம், மீராவின் வீட்டிற்கு வந்த செல்வம், 60, மது குடிக்க பணம் கேட்டு, அவருக்கு தொல்லை செய்துள்ளார்.
என்னிடம் பணம் இல்லை என, மீரா கூறியதால் ஆத்திரமடைந்த செல்வம், சிறிய கடப்பாரையால், மனைவியின் தலையில் அடித்துள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த மீராவை, அவரது மகன்கள் மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
பரங்கிமலை போலீசார், பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, முகலிவாக்கம் பகுதியில் இருந்த செல்வத்தை கைது செய்துள்ளனர்.

