/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
டேங்கர் லாரி மோதியதில் இளம்பெண் உயிரிழப்பு
/
டேங்கர் லாரி மோதியதில் இளம்பெண் உயிரிழப்பு
ADDED : டிச 08, 2025 06:27 AM

மாதவரம்: மாதவரம் அருகே லாரி மோதியதில், ஸ்கூட்டரில் சென்ற இளம்பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மாதவரம் அடுத்த மாத்துார் எம்.எம்.டி.ஏ., காலனியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ், 31. இவரது மனைவி சிவரஞ்சனி, 28. அண்ணாநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
வழக்கம்போல் பணி முடிந்து, நேற்று முன்தினம் இரவு தன் ஸ்கூட்டரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். மஞ்சம்பாக்கம் அருகே சென்றபோது, பின்னால் வந்த டேங்கர் லாரி சிவரஞ்சனியின் ஸ்கூட்டரில் மோதியது. இதில், துாக்கி வீசப்பட்ட அவர், தலையில் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இறந்தவரின் உடலை கைப்பற்றி, செங்குன்றம் போலீசார் விசாரித்ததனர். இதில், விபத்தை ஏற்படுத்தியது, நாகப்பட்டினம் மாவட்டம், கீழவேலுாரைச் சேர்ந்த ஸ்ரீநாத், 25, என்பது தெரிய வந்தது. நேற்று அவரை, போலீசார் கைது செய்தனர்.

