/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பணம் வைத்து சீட்டாடிய ஆறு பேருக்கு காப்பு
/
பணம் வைத்து சீட்டாடிய ஆறு பேருக்கு காப்பு
ADDED : டிச 28, 2024 08:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், காவேரிராஜபுரம், ஏரிக்கரை அருகே, பணம் வைத்து சீட்டாடுவதாக, கனகம்மாசத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்து. அதன்படி, போலீசார் நேற்று முன்தினம், இரவு 9:00 மணியளவில் அந்த இடத்தை சுற்றி வளைத்தனர்.
அப்போது, பணம் வைத்து சீட்டாடிய காவேரிராஜபுரம் கொண்டையா 40, திருவாலங்காடு கேசவன் 38, பாலாஜி 35, ராமஞ்சேரி ராஜா 37, திருவள்ளூர் பிரபு 40, கோபி 42, ஆகிய ஆறு பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து, 10,300 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.