/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கோவில் உண்டியல் உடைத்து திருடிய மூவருக்கு 'காப்பு'
/
கோவில் உண்டியல் உடைத்து திருடிய மூவருக்கு 'காப்பு'
கோவில் உண்டியல் உடைத்து திருடிய மூவருக்கு 'காப்பு'
கோவில் உண்டியல் உடைத்து திருடிய மூவருக்கு 'காப்பு'
ADDED : நவ 13, 2024 09:00 PM
சோழவரம்:சோழவரம் அடுத்த சோத்துப்பெரும்பேடு கிராமத்தில், லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. கடந்த 11ம் தேதி நள்ளிரவு, அங்குள்ள உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது.
இதுகுறித்து வழக்கு பதிந்த சோழவரம் போலீசார், கோவிலில் உள்ள 'சிசிடிவி' கேமராவை ஆய்வு செய்தனர். அதில், மூன்று மர்மநபர்கள் உண்டியலை உடைத்து பணம் திருடுவது தெரிந்தது.
விசாரணையில், சோழவரம் அடுத்த ஆங்காடு கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ், 19, மனோஜ், 20, திலீப்ராஜ், 23, என்பது தெரிய வந்தது. நேற்று மூவரையும் கைது செய்த போலீசார் விசாரிக்கின்றனர்.
ஊத்துக்கோட்டை
அதேபோல், பெரியபாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மெய்யூர் ராசபாளையம் ஊராட்சி. இங்கு, பழமை வாய்ந்த பவானியம்மன் கோவில் மற்றும் வீராத்தம்மன் கோவில் உள்ளது.
நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல், கோவில் பூசாரிகள் கோவிலை பூட்டி விட்டு சென்றனர். நேற்று காலை பூசாரிகள் கோவிலை திறக்க வந்தபோது, கோவிலின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது.
இதில், பவானியம்மன் கோவிலில் உண்டியல் மற்றும் வீராத்தம்மன் கோவிலில் சூளாயுதம் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து பெரியபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.