/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புதர்மண்டிய கழிவுநீர் கால்வாய் சீரமைக்க பகுதிவாசிகள் கோரிக்கை
/
புதர்மண்டிய கழிவுநீர் கால்வாய் சீரமைக்க பகுதிவாசிகள் கோரிக்கை
புதர்மண்டிய கழிவுநீர் கால்வாய் சீரமைக்க பகுதிவாசிகள் கோரிக்கை
புதர்மண்டிய கழிவுநீர் கால்வாய் சீரமைக்க பகுதிவாசிகள் கோரிக்கை
ADDED : நவ 27, 2024 01:03 AM

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் வீரராகவபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது புளியங்குண்டா கிராமம். இங்கு திருவாலங்காடு சாலையில் அமைந்துள்ள குடியிருப்புகளில் தேங்கும் மழைநீர் மற்றும் வீட்டு உபயோக கழிவுநீர் செல்ல கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது.
இக்கால்வாயை, ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால் கால்வாயில் செடி, கொடிகள் புதர்போல மண்டியுள்ளன.
இதனால், கால்வாயில் கழிவுநீர் வெளியேறாமல் ஒரே இடத்தில் தேங்குவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுத்தொல்லையும் அதிகரித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பலத்த மழை பெய்தால், கால்வாய் வாயிலாக செல்ல வேண்டிய மழைநீர், கழிவுநீருடன் கலந்து சாலையில் வழிந்தோடும்.
எனவே, பருவமழை தீவிரமடைவதற்குள் கால்வாயை துார்வாரி சீரமைக்க, ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.