/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குடிநீர் வினியோகம் பாதிப்பு பகுதிமக்கள் சாலை மறியல்
/
குடிநீர் வினியோகம் பாதிப்பு பகுதிமக்கள் சாலை மறியல்
குடிநீர் வினியோகம் பாதிப்பு பகுதிமக்கள் சாலை மறியல்
குடிநீர் வினியோகம் பாதிப்பு பகுதிமக்கள் சாலை மறியல்
ADDED : ஜூலை 15, 2025 09:17 PM
பள்ளிப்பட்டு:சீராக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி, அத்திமாஞ்சேரி பகுதிமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பள்ளிப்பட்டு ஒன்றியம், கொடிவலசா ஊராட்சிக்கு உட்பட்டது அத்திமாஞ்சேரிப்பேட்டை. இந்த கிராமத்தில், கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், பகுதிவாசிகள் அவதிப்பட்டு வருகின்றனர். நேற்று காலை பள்ளி செல்லும் மாணவர்களும், வேலைக்கு செல்பவர்களும் தண்ணீர் தட்டுப்பாட்டால் பெரிதும் அவதிப்பட்டனர். அதிருப்தி அடைந்த பகுதி மக்கள் பள்ளிப்பட்டு மாநில நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொதட்டூர்பேட்டை போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு நடத்தினர். அதிகாரிகளுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதை ஏற்று, மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். மறியல் காரணமாக பள்ளிப்பட்டு மார்க்கத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.