/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இணைப்பு சாலையை சீரமைக்க ஆத்துாரில் வாசிகள் கோரிக்கை
/
இணைப்பு சாலையை சீரமைக்க ஆத்துாரில் வாசிகள் கோரிக்கை
இணைப்பு சாலையை சீரமைக்க ஆத்துாரில் வாசிகள் கோரிக்கை
இணைப்பு சாலையை சீரமைக்க ஆத்துாரில் வாசிகள் கோரிக்கை
ADDED : மே 19, 2025 11:55 PM

சோழவரம், சோழவரம் அடுத்த காரனோடை - ஆத்துார் பகுதிகளுக்கு இடையே, சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைந்துள்ளது.
இந்த பாலத்தின் அருகே உள்ள இணைப்பு சாலைகள் முறையாக பராமரிக்கப்படாததால், ஆத்துாரில் இருந்து, சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் சாலை சேதமடைந்துள்ளது.
இணைப்பு சாலை முழுதும், மண் குவிந்து புழுதி பறக்கிறது. ஆத்துார், புதிய எருமைவெட்டிப்பாளையம், பழைய எருமைவெட்டிப்பாளையம் கிராமங்களைச் சேர்ந்தவர்கள், சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையை அடைய கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி, சாலையை முற்றிலும் பயன்படுத்த முடியாமல் கிராமவாசிகள் தவிக்கின்றனர். இந்த இணைப்பு சாலையை சீரமைக்க, நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.