/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புதராக மாறிய மழைநீர் கால்வாய் துார்வார பகுதிவாசிகள் கோரிக்கை
/
புதராக மாறிய மழைநீர் கால்வாய் துார்வார பகுதிவாசிகள் கோரிக்கை
புதராக மாறிய மழைநீர் கால்வாய் துார்வார பகுதிவாசிகள் கோரிக்கை
புதராக மாறிய மழைநீர் கால்வாய் துார்வார பகுதிவாசிகள் கோரிக்கை
ADDED : ஜூன் 13, 2025 02:28 AM

திருவள்ளூர்:அய்யனார் அவென்யூ பகுதியில் உள்ள மழைநீர் கால்வாய் புற்கள் வளர்ந்து, புதராக மாறியுள்ளது. மழைக்கு முன் கால்வாயை துார்வார பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் ரயில் நிலையம், பெரியகுப்பம், அய்யனார் அவென்யூ, எல்.ஐ.சி., பகுதிகளில், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள், நான்கு திருமண மண்டபங்கள், உள்ளன. இப்பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், மழைநீர் ஆகியவை செல்ல பொதுப்பணி -நீர்வள துறை கால்வாய் உள்ளது.
இந்த கால்வாய், பெரியகுப்பம் ரயில் நிலையம் அருகில் துவங்கி, எம்.எல்.ஏ., அலுவலகம் வழியாக, அய்யனார் அவென்யூ, எல்.ஐ.சி., வரை வருகிறது. பின் இங்கிருந்து ஜே.என்.சாலையில் கட்டப்பட்டுள்ள பாலம் வழியாக, சிவா விஷ்ணு நகர், ஜெயின் காலனி, வி.எம்.நகர் வழியாக, காக்களூர் ஏரியை சென்றடைகிறது.
இந்த கால்வாயை பொதுப்பணி துறை துார் வாராததால், மழை காலத்தில் தண்ணீர் வெளியேறுவதில் தடை ஏற்படும் நிலை ஏற்பட்டது. தற்போது, அய்யனார் அவென்யூ பகுதியில், புற்கள் வளர்ந்து புதராக மாறிவிட்டது. மழைநீர் செல்ல வழியில்லாமல், கால்வாயில் தேங்கி, சாக்கடையாக மாறி துர்நாற்றம் வீசுகிறது. மேலும், கொசு உற்பத்தியாகி நோய் பரவும் அபாயமும் உள்ளது.
எனவே, மழைநீர் கால்வாயை மழைக்கு முன் உடனடியாக துார்வாரி அகற்ற, நீர்வளத் துறையினருக்கு கலெக்டர் உத்தரவிட வேண்டும் என, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.