/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புதருக்குள் மாயமாகி வரும் குளம் துார்வார பகுதிவாசிகள் எதிர்பார்ப்பு

ADDED : நவ 08, 2024 01:42 AM

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது திருப்பந்தியூர் ஊராட்சி. இப்பகுதியில் இருந்து பண்ணுார் செல்லும் நெடுஞ்சாலையோரம் பயணியர் நிழற்குடை அருகே வானியன் குளம் உள்ளது.
இந்த குளத்து நீரை பகுதிவாசிகள் பயன்படுத்தி வந்தனர். போதிய பராமரிப்பு இல்லாததால் செடிகள் வளர்ந்துள்ளது. மேலும் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கலந்து புதர் மண்டி துர்நாற்றம் வீசுகிறது.
இதனால் இவ்வழியே வாகனங்களில் செல்லும் பகுதிவாசிகள் அவதிப்பட்டு வருவதோடு தொற்று நோய் அபாயம் ஏற்படும் அச்சத்தில் உள்ளனர்.
சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் வானியன் குளத்தை துார்வாரி சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.