/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மின் விளக்கின்றி கம்பம் ராமாபுரம்வாசிகள் அவதி
/
மின் விளக்கின்றி கம்பம் ராமாபுரம்வாசிகள் அவதி
ADDED : டிச 15, 2024 12:15 AM

திருவாலங்காடு,:திருவாலங்காடு ஒன்றியம், ராமாபுரம் கிராமத்தில், 1,500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு திருவாலங்காடு, திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று வருகின்றனர்.
இங்கு வசிப்பவர்கள், பல்வேறு வேலையாக சென்றுவிட்டு, அத்திப்பட்டு கூட்டுச்சாலை பேருந்து நிறுத்தத்தில் இறங்கி காவேரிராஜபுரம், ரங்காபுரம் வழியாக, 2 கி.மீ., துாரத்தில் உள்ள ராமாபுரம் கிராமத்திற்கு செல்கின்றனர்.
அப்படி செல்லும் போது ரங்காபுரத்தில் இருந்து ராமாபுரம் வரையிலான சாலையில் உள்ள மின்கம்பத்தில் விளக்கு பொருத்தப்படாமல் உள்ளதால், அந்த சாலை இருட்டாக காணப்படுகிறது.
இதனால், பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பாக கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, மின்கம்பத்தில் மின் விளக்கு பொருத்த, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருவாலங்காடு வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'நிதிப் பற்றாக்குறை காரணமாக மின்விளக்கு பொருத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் பொருத்தப்படும்' என்றார்.