/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மூடி இல்லாமல் மழைநீர் கால்வாய் கண்ணதாசன் நகர் வாசிகள் அதிருப்தி
/
மூடி இல்லாமல் மழைநீர் கால்வாய் கண்ணதாசன் நகர் வாசிகள் அதிருப்தி
மூடி இல்லாமல் மழைநீர் கால்வாய் கண்ணதாசன் நகர் வாசிகள் அதிருப்தி
மூடி இல்லாமல் மழைநீர் கால்வாய் கண்ணதாசன் நகர் வாசிகள் அதிருப்தி
ADDED : மார் 13, 2024 10:55 PM
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை பேரூராட்சி, பஜார் பகுதியில் கண்ணதாசன் நகர் உள்ளது. வளர்ந்து வரும் இப்பகுதியில், 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இப்பகுதியில், போதிய சாலை வசதி மற்றும் கால்வாய் வசதி அமைக்கப்படாமல் இருந்தது. இதுகுறித்து, அப்பகுதியினர் பேரூராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்ததன் பேரில், மூன்று மாதங்களுக்கு முன், 18 லட்சம் ரூபாயில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி நடந்தது.
தற்போது பணிகள் முடிந்துள்ள நிலையில், கால்வாய் மேல் மூடி இல்லாமல் திறந்த வெளியில் உள்ளது. இதனால், கால்வாய்களில் குப்பை சேர்ந்து தண்ணீர் மேற்கொண்டு செல்லாமல், ஆங்காங்கே தேங்கி வருகிறது.
இதில், கொசுக்கள் உருவாகி பல்வேறு காய்ச்சல்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், தாலுகா அலுவலக சாலையில், பாதசாரிகள் நடந்து செல்ல முடியாத நிலையில், கால்வாய் மூடி அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், கண்ணதாசன் நகரில் அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால்வாய் மட்டும் மூடி இன்றி அமைக்கப்பட்டு உள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.