/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சமூக விரோதிகளின் கூடாரமான பொன்னேரி காவலர் குடியிருப்பு குடியிருப்புவாசிகள் அச்சம்
/
சமூக விரோதிகளின் கூடாரமான பொன்னேரி காவலர் குடியிருப்பு குடியிருப்புவாசிகள் அச்சம்
சமூக விரோதிகளின் கூடாரமான பொன்னேரி காவலர் குடியிருப்பு குடியிருப்புவாசிகள் அச்சம்
சமூக விரோதிகளின் கூடாரமான பொன்னேரி காவலர் குடியிருப்பு குடியிருப்புவாசிகள் அச்சம்
ADDED : நவ 20, 2024 01:45 AM

பொன்னேரி:பொன்னேரி, செங்குன்றம் சாலையில் உள்ள காவலர்களுக்கான குடியிருப்பு வளாகத்தில், இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., தலைமை காவலர்கள் ஆகியோருக்கு என, மொத்தம், 28 காவலர் குடியிருப்புகள் உள்ளன.
இந்த கட்டடங்கள் முற்றிலும் பழுதடைந்ததால், கடந்த 15 ஆண்டுகளாக காவலர்கள் யாரும் வசிக்கவில்லை. குடியிருப்புகள் பயன்பாடு இல்லாத நிலையில், இவற்றை இடித்து அகற்றவில்லை.
தற்போது முழுமையாக பாழடைந்து உள்ளன. கட்டடங்களில் பெரிய பெரிய மரங்கள் வளர்ந்தும், புதர் சூழந்தும், கழிவுநீர் தேங்கியும் உள்ளது.
கட்டடங்கள் சேதமடைந்தும், விரிசல்களுடன் இருப்பதால், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளன. இதனால், அருகில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் ஒவ்வொரு ஆண்டு புயல், மழைக்காலங்களில் அச்சத்துடன் இருக்கின்றனர்.
மேலும், இந்த கட்டடங்கள் மது அருந்துவதற்கும், கஞ்சா புகைப்பதற்கும் என, சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளன. காவலர் குடியிருப்பு பகுதிக்குள் எப்போதும் சமூக விரோதிகள் இருப்பதால் கோவில், கடை மற்றும் கல்லுாரி சென்று வரும் பெண்கள் அச்சத்திற்கு ஆளாகின்றனர்.
தற்போது, வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால், கட்டடங்கள் விழுந்துவிடுமோ என, குடியிருப்புவாசிகளும் அச்சத்தில் உள்ளனர்.
பல்வேறு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வரும் பாழடைந்த காவலர் குடியிருப்பு கட்டடங்களை முழுமையாக இடித்துவிட்டு, புதிய குடியிருப்புகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.