/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குடிநீர் இல்லாமல் புட்லுார் பகுதிவாசிகள் அவதி
/
குடிநீர் இல்லாமல் புட்லுார் பகுதிவாசிகள் அவதி
ADDED : நவ 14, 2024 10:04 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த புட்லூர் ஊராட்சியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இப்பகுதியில் ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர், 2015ம் ஆண்டு, காக்களூர் - புட்லுாரை இணைக்கும் வகையில், 18 கோடி ரூபாயில் மேம்பாலம் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. இதன்படி, 620 மீட்டர் நீளம், 30 மீட்டர் அகலம் உடைய மேம்பாலம் கட்டும் பணி துவங்கியது.
இதனால் குடியிருப்புகளுக்கு செல்லும் குடிநீர் குழாய் சேதமடைந்தது.
மேம்பால பணிகள் நிறைவடைந்து இரண்டரை ஆண்டுகளாகியும் இன்று வரை சேதமடைந்த குடிநீர் குழாய்களை சீரமைக்க ஒன்றிய நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் பிருந்தாவனம் நகர், தாமரைக்குளம், புட்லுார் ரயில் நிலையம் முதல் திருவூர் செல்லக் கூடிய சாலை பகுதியில் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிவாசிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி, ஒன்றிய நிர்வாகம் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, மாவட்ட கலெக்டர் புட்லுார் ரயில்வே மேம்பாலம் அமைந்துள்ள பகுதியில் ஆய்வு செய்து குழாய்களை சீரமைத்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென புட்லுார் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.