/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாய்ந்த நிலையில் மின்கம்பங்கள் அச்சத்தில் சத்தரை பகுதிவாசிகள்
/
சாய்ந்த நிலையில் மின்கம்பங்கள் அச்சத்தில் சத்தரை பகுதிவாசிகள்
சாய்ந்த நிலையில் மின்கம்பங்கள் அச்சத்தில் சத்தரை பகுதிவாசிகள்
சாய்ந்த நிலையில் மின்கம்பங்கள் அச்சத்தில் சத்தரை பகுதிவாசிகள்
ADDED : பிப் 05, 2025 02:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட சத்தரை ஊராட்சி. இங்கிருந்து சத்தரை பள்ள காலனி வழியாக, மப்பேடு மற்றும் பிஞ்சிவாக்கம் செல்லும் ஒன்றிய சாலை உள்ளது.
இதில், பல இடங்களில் சாலையோர மின்கம்பங்கள் சாய்ந்து அபாய நிலையில் உள்ளது. இதனால், இவ்வழியே இருசக்கர வாகனங்களில் செல்லும் பகுதிவாசிகள் மற்றும் நடந்து செல்வோர் அச்சத்துடன் சென்று வருகின்றனர். சில இடங்களில் மின்கம்பங்கள் சேதமடைந்து எலும்புக்கூடாக மாறியுள்ளது.
எனவே, சாலையோரம் சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பங்களை சீரமைக்க வேண்டும் என, சத்தரை பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.