/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரேஷனுக்கு புதிய கட்டடம் பகுதிவாசிகள் எதிர்பார்ப்பு
/
ரேஷனுக்கு புதிய கட்டடம் பகுதிவாசிகள் எதிர்பார்ப்பு
ரேஷனுக்கு புதிய கட்டடம் பகுதிவாசிகள் எதிர்பார்ப்பு
ரேஷனுக்கு புதிய கட்டடம் பகுதிவாசிகள் எதிர்பார்ப்பு
ADDED : பிப் 09, 2024 08:18 PM
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் தொழுதாவூர் ஊராட்சியில்,மேட்டுத்தெரு, கலைஞர் நகரில் 400க்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர்.
இவர்களுக்கு அரசு நடுநிலைப்பள்ளி அருகே ரேஷன்கடை கட்டடம் இருந்த நிலையில், புறம்போக்கு இடத்தில் புதிய கடை கட்டப்பட்டதால் கடந்தாண்டு உயர் நீதிமன்ற உத்தரவின்படி இடித்து அகற்றப்பட்டது.
அன்று முதல் ரேஷன் கடை அதே பகுதியில் உள்ள கிராம சேவை மையத்தில் இயங்கி வருகிறது.
இந்த கட்டடத்தில் போதிய இடவசதி இல்லாமலும் பழுதடைந்த கட்டடமாக உள்ளதால் நுகர்வோர் பொருட்களை வாங்கிச் செல்ல அவதியடைந்து வருகின்றனர் .
எனவே தொழுதாவூர் கிராமத்தில் புதிய ரேஷன் கட்டடம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.