/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கழிவுநீர் குளமாகிய சாலை பகுதிவாசிகள் அவதி
/
கழிவுநீர் குளமாகிய சாலை பகுதிவாசிகள் அவதி
ADDED : செப் 25, 2024 12:46 AM

திருவள்ளூர்:திருமழிசை பேரூராட்சி 5வது வார்டுக்குட்பட்ட விக்னேஷ்வர நகர் பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன் கழிவுநீர் செல்லும் வகையில் கால்வாய் மற்றும் சிறுபாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதனால் கழிவுநீர் செல்ல வழியில்லாம் சாலையில் குளம்போல் தேங்கி நிற்பதால் பகுதிவாசிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
மேலும் இப்பகுதி வழியாக இங்குள்ள தனியார் கல்லுாரிக்கு செல்லும் மாணவ, மாணவியரும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
கழிவுநீர் செல்வதற்கு சரியான திட்டமிடல் இல்லாமல் பணிகள் நடந்து வருவதால் தொற்று நோய் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் கால்வாய் மற்றும் சிறு பாலம் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென திருமழிசை பகுதிவாசிகள் மற்றும் மாணவ, மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.