/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குடிநீர் தொட்டியை சூழ்ந்த மழைநீர் வரதராஜபுரம் பகுதிவாசிகள் அவதி
/
குடிநீர் தொட்டியை சூழ்ந்த மழைநீர் வரதராஜபுரம் பகுதிவாசிகள் அவதி
குடிநீர் தொட்டியை சூழ்ந்த மழைநீர் வரதராஜபுரம் பகுதிவாசிகள் அவதி
குடிநீர் தொட்டியை சூழ்ந்த மழைநீர் வரதராஜபுரம் பகுதிவாசிகள் அவதி
ADDED : டிச 28, 2024 01:40 AM

திருமழிசை:திருமழிசை பேரூராட்சி அடுத்துள்ளது பூந்தமல்லி ஒன்றியத்துக்குட்பட்ட வரதராஜபுரம் ஊராட்சி.
சென்னை - பெங்களூர் தேசிய அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையோரம் இந்த ஊராட்சிக்குட்பட்ட கிளை நுாலகம், வி.ஏ.ஓ., அலுவலகம், கிராம இ- சேவை மையம், மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டி போன்ற அரசு கட்டடங்கள் உள்ளன.
கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் அரசு கட்டங்கள் அனைத்திலும் மழைநீர் சூழ்ந்து குளம்போல் மாறியுள்ளது. இதனால் பகுதிவாசிகள், கிளை நுாலகம், கிராம சேவை மையம் போன்ற அரசு கட்டடங்களுக்கு வரமுடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளதால் தற்போது அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசி வருகிறது.
இதில் வி.ஏ.,ஓ., அலுவலகத்ததிற்கு பகுதிவாசிகள் வரும் வகையில் மண்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் குடிநீர் தொட்டியை மழைநீர் சூழ்ந்துள்ளதால் இதிலிருந்து விநியோகிக்கப்படும் குடிநீரால் பகுதிவாசிகளுக்கு தொற்று நோய் அபாயம் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஊராட்சி பகுதியில் ஆய்வு மழைநீரை அகற்றவும் வரும் காலங்களில் மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வரதராஜபுரம் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.