/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாட்டிறைச்சி கழிவுகளால் குடியிருப்புவாசிகள் அவதி
/
மாட்டிறைச்சி கழிவுகளால் குடியிருப்புவாசிகள் அவதி
ADDED : ஜூன் 09, 2025 03:12 AM

பொன்னேரி:பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட செங்குன்றம் சாலைக்கு அருகே, சுடுகாடு பகுதி ஆரணி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளது.
இங்கு நகராட்சியின் குப்பை கழிவுகள் கொட்டி எரிக்கப்படுகிறது. இந்நிலையில் தனிநபர்கள் சிலர், இறைச்சிக்காக மாடுகளை அறுக்கும் பணியை இதே பகுதியில் மேற்கொள்கின்றனர்.
கழிவுகளை சுகாதாரமின்றி திறந்த வெளியில் விட்டு செல்கின்றனர். இது அருகில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
இது குறித்து குடியிருப்புவாசிகள் கூறியதாவது:
இப்பகுதியில் நகராட்சி மற்றும் தனியார் நிறுவனங்கள் குப்பை கழிவுகளை கொண்டு கொட்டுகின்றன. அவ்வப்போது அவை எரிக்கப்படுவதால், சிரமத்திற்கு ஆளாகி வருகிறோம். இந்நிலையில், மாடுகள் இங்கு கொண்டு வந்து அறுக்கப்படுகின்றன.
இறைச்சியை மட்டும் எடுத்துக்கொண்டு, தலை, கால், குடல் உள்ளிட்ட கழிவுகளை அப்படியே விட்டு செல்கின்றனர். இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. நகராட்சி நிர்வாகம் உரிய கண்காணிப்பு மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.