/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இடிந்து விழும் அபாய நிலையில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம்
/
இடிந்து விழும் அபாய நிலையில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம்
இடிந்து விழும் அபாய நிலையில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம்
இடிந்து விழும் அபாய நிலையில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம்
ADDED : நவ 10, 2024 02:13 AM

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை தாலுகா, பாலாபுரம் வருவாய் சரகத்திற்கு உட்பட்ட பாலாபுரம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம், பாலாபுரம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் அமைந்துள்ளது. பாலாபுரம் சுற்றுப்பகுதியை சேர்ந்த பகுதிவாசிகள், பல்வேறு சான்றுகள் பெறுவதற்காக இந்த அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர்.
இந்த அலுவலகத்தின் மேல்தளம் உருக்குலைந்து இடிந்து விழுந்து வருகிறது. இதனால், இதே வளாகத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கும் வந்து செல்லும் பகுதிவாசிகள் அச்சத்தில் தவித்து வருகின்றனர்.
ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு பகுதிவாசிகள், 100 நாள் வேலை தொழிலாளர்கள், துாய்மை பணியாளர்கள், வார்டு உறுப்பினர்கள், பம்ப் ஆப்பரேட்டர்கள் என பல்வேறு தரப்பினரும் தினசரி வந்து செல்கின்றனர்.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த அலுவலக வளாகத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டத்தை, பாதுகாப்பு கருதி உடனடியாக புதுப்பிக்க வேண்டும் என பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.