/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
லஞ்சம் வாங்கிய வருவாய்த்துறை அலுவலர் கைது
/
லஞ்சம் வாங்கிய வருவாய்த்துறை அலுவலர் கைது
ADDED : செப் 26, 2024 01:34 AM

பொன்னேரி:சோழவரம் அடுத்த பெருங்காவூரைச் சேர்ந்தவர் ராமதாஸ், 61. இவர் பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட விச்சூர் கிராமத்தில், கிராம உதவியாளராக பணிபுரிந்து, கடந்தாண்டு ஓய்வு பெற்றார்.
இவருக்கு கிடைக்க வேண்டிய பணப்பலன்களுக்காக, பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அடிக்கடி வந்து சென்றார்.
இதற்காக, பொன்னேரி வட்டாட்சியர் அலவலகத்தில் சம்பள பதிவேடு பிரிவில், மூன்றாம் நிலை வருவாய் உதவியாளராக பணிபுரிந்து வரும் ஷேக் முகம்மது, 27, என்பவரை அணுகினார். அவர், ராமதாஸின் பணப்பலன்களுக்கான பதிவேடுகளை தயார் செய்து தருவதற்கு, 3,000 ரூபாய் லஞ்சம் கேட்டார்.
லஞ்சம் தர விருப்பமில்லாத ராமதாஸ், இது குறித்து திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் தெரிவித்தார். டி.எஸ்.பி., ராமச்சந்திர மூர்த்தி தலைமையில், லஞ்ச ஒழிப்பு துறையினர் பொன்னேரியில் முகாமிட்டனர்.
லஞ்ச ஒழிப்பு துறையினரின் அறிவுறுத்தலின்படி ராமதாஸ், பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகம் சென்று, ஷேக் முகம்மதுவிடம், ரசாயனம் தடவிய, 3,000 ரூபாயை கொடுத்தார்.
லஞ்ச பணத்தை ராமதாஸிடம் இருந்து பெறும்போது, மறைவில் காத்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், ஷேக் முகம்மதுவை கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரிக்கின்றனர்.