/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 23, 2025 08:54 PM
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலக வாயிலில், வருவாய் கிராம ஊழியர்கள் சங்கத்தினர், 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஊத்துக்கோட்டை வட்ட தலைவர் மூர்த்தி தலைமை வகிக்க, வட்ட செயலர் மல்லிகார்ஜூனன் வரவேற்றார். மாவட்ட தலைவர் அருள் சிறப்புரை ஆற்றினார்.
கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்குதல், கிராம ஊழியர்கள் இறந்தால் அவர்களின் வாரிசுகளுக்கு வேலை வாய்ப்பு, 2007ம் ஆண்டிற்கு பின் பணிக்கு வந்த சி.பி.எஸ். திட்டத்தில் பணி பார்த்து ஓய்வு பெற்ற, இறந்த போன கிராம உதவியாளர்களிடம் பிடித்த செய்த தொகை, அதற்குண்டான அரசு பங்கீடு வழங்குதல்.
கிராம நிர்வாக அலுவலர்களை மாற்று பணிக்கு ஈடுபடுத்துவதை தவிர்த்தல் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

