/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆர்.ஐ., மீது ஊழல் புகார் நாளை ஆஜராக உத்தரவு
/
ஆர்.ஐ., மீது ஊழல் புகார் நாளை ஆஜராக உத்தரவு
ADDED : மே 20, 2025 12:18 AM
திருவள்ளூர்,
திருவள்ளூர் நகராட்சி வருவாய் ஆய்வாளர் மீது அளிக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு புகார் குறித்து விசாரிக்க, நாளை ஆஜராகுமாறு நகராட்சி நிர்வாக இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளூர் நகராட்சி வருவாய் ஆய்வாளராக விஜயா என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர், இதற்கு முன் திருநின்றவூர் நகராட்சியில் பணிபுரிந்த போது, சட்டத்திற்கு புறம்பாக விதிமீறிய ஐந்து கட்டடங்களுக்கு அனுமதி அளித்துள்ளதாகவும், திருவள்ளூரிலும் விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் உள்ளதாகவும், நகராட்சி நிர்வாக இயக்குனருக்கு புகார் வந்தது.
இந்த புகார் மீது விசாரணை நடத்த, நாளை சென்னை நகராட்சி நிர்வாக துணை இயக்குனர் (நகரமைப்பு) முன்னிலையில் ஆஜராகுமாறு, நகராட்சி நிர்வாக இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.