/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள் விவசாயிகள் கவலை
/
மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள் விவசாயிகள் கவலை
ADDED : அக் 18, 2024 02:35 AM

பொன்னேரி:பொன்னேரி அடுத்த அரவாக்கம், மத்ராவேடு, மடிமைகண்டிகை, வீரங்கிமேடு, ஏருசிவன், ஆசானபூதுார் ஆகிய கிராமங்களில், 2,000 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது.
விவசாய நிலங்களில் தேங்கும் மழைநீர் அங்குள்ள வடிகால்வாய் வழியாக, வெளியேற்றப்பட்டு வந்தது.
மேற்கண்ட வடிகால்வாய் முழுதும் புதர் மண்டியும், முள்செடிகள் வளர்ந்தும், துார்ந்தும் போனது. தனிநபர்கள் வசதிக்காக கால்வாயின் குறுக்கே சிறிய அளவிலான சிமென்ட் உருளைகள் பதித்து ஆங்காங்கே பாதைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இவற்றால் மழைக்காலங்களில் விவசாய நிலங்களில் தேங்கும் மழைநீர் செல்ல வழியின்றி நெற்பயிர்கள் பாதிக்கின்றன.
தற்போது பெய்த கனமழையால், மேற்கண்ட கிராமங்களில் நெல் பயிரிடப்பட்ட விவசாய நிலங்கள் மழைநீரில் மூழ்கி கிடக்கின்றன. தேங்கிய மழைநீர் வெளியேற வழியின்றி கிடக்கிறது. வடிகால்வாய் இருந்தும் பயனின்றி கிடப்பதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.