/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வேகத்தடையை தவிர்க்கும் லாரிகளால் விபத்து அபாயம்
/
வேகத்தடையை தவிர்க்கும் லாரிகளால் விபத்து அபாயம்
ADDED : மார் 02, 2024 10:11 PM

பொன்னேரி:பொன்னேரி - திருவொற்றியூர் மாநில நெடுஞ்சாலையில் உள்ள வேண்பாக்கம் பகுதியில், ரயில் நிலைய சாலை, திருவேங்கிடபுரம் சாலை, உப்பரபாளையம் செல்லும் சாலை ஆகியவை சந்திக்கின்றன.
இப்பகுதியில் விபத்துகளை தவிர்க்க, சாலையின் இருபுறமும் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில், மீஞ்சூர் பகுதியில் இருந்து பொன்னேரி நோக்கி செல்லும் லாரிகள் வேகத்தடைகளை தவிர்ப்பதற்காக, வலது பக்க சாலையில் பயணித்து, மீண்டும் இடதுபுற சாலைக்கு திரும்புகின்றன. வேகமாக வலது, இடது என திரும்பும்போது விபத்துக்கள் ஏற்படுகிறது. லாரிகள், அங்குள்ள மீடியன்களில் மோதி சேதம் அடைகின்றன.
மேலும், இப்பகுதியில் மாதசிலை அருகில் சாலையை ஆக்கிரமிப்புகள் கடைகள், கடைகளின் விளம்பர பலகைகள் உள்ளன.
நேற்று அதிகாலை மீஞ்சூரில் இருந்து நிலக்கரி ஏற்றி வந்த லாரி ஒன்று, வேண்பாக்கம் பகுதியில் உள்ள மீடியனில் மோதி விபத்திற்கு உள்ளானது. அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் சாலை விதிகளை மீறி பயணிக்கும் லாரிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும், போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள கடை மற்றும் விளம்பர பலகைகளை அகற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

