/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குவியும் குப்பையால் தொற்று நோய் அபாயம்
/
குவியும் குப்பையால் தொற்று நோய் அபாயம்
ADDED : நவ 08, 2025 02:07 AM

பெருமாள்பட்டு: பெருமாள்பட்டு ஊராட்சியில் குடியிருப்பு பகுதியில் சாலையோரம் மலைபோல் குப்பை குவிந்து வருவதால் மக்களுக்கு தொற்று நோய் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் அடுத்துள்ளது பெருமாள்பட்டு ஊராட்சி. இங்கு பெருமாள்பட்டு கிராமம், காலனி, கோவில்குப்பம் கிராமம், காலனி, தமிழ்நாட்டு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உட்பட 20க்கும் மேற்பட்ட நகர்கள் உள்ளன.
இங்குள்ள குடியிருப்பு பகுதியில், வாரத்தில் இருமுறை பகுதி வாரியாக துாய்மை பணியாளர்கள், குப்பையை வீடு தோறும் சென்று சேகரித்து வருகின்றனர்.
சாலையோரம் குப்பை கொட்டக்கூடாது என எச்சரிக்கை பதாகை வைக்கப்பட்டும், அப்பகுதியில் குப்பை கொட்டும் பணி தொடர்கிறது.
குப்பை அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால், சாலையோரம் குப்பை மலைபோல் குவிந்து வருகிறது.
இதனால் ஏற்படும் துர்நாற்றத்தால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், குடியிருப்பு பகுதிகளில் சாலையோரம் மலைபோல் குவிந்து வரும் குப்பையை அகற்ற வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

