/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பராமரிப்பில்லாத ரயில் நிலைய நடைமேடை
/
பராமரிப்பில்லாத ரயில் நிலைய நடைமேடை
ADDED : நவ 08, 2025 02:08 AM

திருவள்ளூர்: செவ்வாப்பேட்டை ரயில் நிலையம் பராமரிப்பின்றி நடைமேடையில் புற்கள் வளர்ந்துள்ளதால், பயணியர் அவதிப்பட்டு வருகின்றனர்.
சென்னை சென்ட்ரல் - திருவள்ளூர் மார்க்கத்தில், செவ்வாப்பேட்டை ரயில் நிலையம் அமைந்துள்ளது. அங்கிருந்து, தினமும் ஆயிரக்கணக்கானோர் ரயில் மூலம், சென்னை, திருவள்ளூர், அரக்கோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
திருவள்ளூர் மார்க்கத்தில் இருந்து சென்னை செல்லும் அனைத்து, புறநகர் மின்சார ரயில்களும் இரண்டாவது நடைமேடையில் நின்று செல்கின்றன.
ரயில் நிலையத்தை ஊழியர்கள் முறையாக பராமரிப்பதில்லை.
இதனால், பயணியர் நிற்கும் நடைமேடையில், புற்கள் வளர்ந்து உள்ளது. எனவே, ரயில்வே நிர்வாகம், செவ்வாப்பேட்டை ரயில் நிலையம் மற்றும் நடைமேடைகளை பராமரித்து, புற்களை அகற்ற வேண்டும் என, பய ணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

